கட்சியின் அடிப்ப்டை கொள்கைகள்

  • வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமி
  • தமக்கு விரும்பிய மதத்தை தழுவுவது தனிநபர் உரிமை
  • இலங்கையில் தமிழர்கள் மேற்கத்தைய ஆதிக்கத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பௌத்த மதத்தை தழுவி பின்னர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டனர்
  • ஒரு மதத்தின் புராதன சின்னங்கள் அம்மதத்தவர் இன்று வாழாத இடங்களில் காணப்படின் அவற்றை எடுத்து நூதனசாலைகளில் வைக்கலாமேயன்றி அந்த இடங்களில் வழிபாட்டுத்தலம் அமைப்பதோ அல்லது புனித பூமியாக பிரகடனப்படுத்துவதோ கூடாது.
  • புதிதாக மதத்தலங்கள் அமைப்பதற்கு அரச இயந்திரங்கள் (பணம், இராணுவம், அரச திணைக்களங்கள்) பாவிக்க கூடாது.
  • தமிழ் பிரதேசங்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் அதிகபட்ச அளவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 13ஆவது திருத்தம் முற்றாக (காணி, காவல்துறை அதிகாரங்களுடன்) நிறைவேற்றப்பட  வேண்டும். 
  • மாகாணங்களின் நிறைவேற்று அதிகாரங்கள் ஆளுனரிடம் இருந்து சபைக்கு மாற்றுப்பட வேண்டும்.
  • காணாமல் ஆக்கப்பட்டோர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விசாரணை நடத்தி அவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
  • அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்
  • இராணுவத்திற்காக எடுக்கப்பட்ட தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்.
  • கட்சியின் மத்திய செயற்குழு தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயல்களை விளங்கப்படுத்தி அதற்கு எதிராக அவர்களின் ஆதரவை பெ

Create Your Own Website With Webador