தமிழருக்கான ஏகோபித்த கட்சி 

வலைத்தளங்களின் ஊடான அரசியல் புரட்சி

 

பின்னணி

இன்று இலங்கையில் தமிழர்கள் அரசியல்ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்கள். தமிழர்களின் பிரதான கட்சி தாங்களே என பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் உரிமை கொண்டாடுகின்றன. இவற்றுள் சில கட்சிகளின் தலைமைகளின் உட்பூசல்களால் அவை மேலும் பிளவுபட்டுக் கொண்டு போகின்றன. சுதந்திரத்திற்கு பின் பல காலமாக இரண்டு பிரதான கட்சிகள் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்தன. பின்னர் 1972இல் அவை இரண்டும் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தன. அன்றில் இருந்து போராட்டம் முன்னிலைக்கு வரும்வரைக்கும் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர்களின் ஏகோபித்த கட்சியாக திகழ்ந்தது. போராட்ட காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி உருவாக்கப்பட்டு, விடுதலைப் புலிகளால் வழி நடத்தப்பட்டு, பெருமளவு மக்களால் ஆதரிக்கப் பட்டது. ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்தபின் அதன் பங்கு கட்சிகள் தனித்தனியாக செயல்பட தொடங்கிவிட்டனர். தமிழ் மக்கள் அரசியலில் மீண்டும் பலம் பெறவேண்டுமெனின் அவர்களுக்கு என்று ஒரு ஏகோபித்த கட்சி வேண்டும். இன்றைய நிலையில் சிதறிக் கிடக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதை உருவாக்குவது என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லை.

ந்த இக்கட்டான காலகட்டதிலும் ஒரு நம்பிக்கையான விடயம் என்னவெனில், பெரும்பாலான தமிழ் மக்கள்  தங்களை எந்த ஒரு கட்சியுடனும் அடையாளப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களில் பூரண நம்பிக்கையின்றி வெவ்வேறு காரணங்களுக்காக யாரோ ஒருவருக்கு தமது வாக்கை அளிக்கிறார்கள்.

தமிழர் புதிய ஜனநாயக கட்சி(TNDP)

(தமிழரின் ஏகோபித்த கட்சி)

இன்று தமிழரின் அரசியல் எதிர்காலம் மிக ஆபத்தான நிலையில் உள்ளதை உணர்கிறீர்களா? இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளில் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? இதில் நீங்கள் தனியாக இல்லை. மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இதே நிலையில் தான் உள்ளார்கள். இதில் இருந்து மீள்வதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களை இந்த கட்சியின் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கான கிராம கிளையின் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்ளுங்கள்.

 

தேர்தல் மாவட்டம் தமிழ் வாக்காளர் (ஏறத்தாழ) மத்திய பொதுக்குழு உறுப்பினர்கள்
யாழ்/கிளிநொச்சி 593,000 12
வன்னி 246,000 5
திருகோணமலை 102,000 2
மட்டக்களப்பு 326,000 7
அம்பாறை 97,000 2