தமிழருக்கான ஏகோபித்த கட்சி 

வலைத்தளங்களின் ஊடான அரசியல் புரட்சி

 

பின்னணி

இன்று இலங்கையில் தமிழர்கள் அரசியல்ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்கள். தமிழர்களின் பிரதான கட்சி தாங்களே என பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் உரிமை கொண்டாடுகின்றன. இவற்றுள் சில கட்சிகளின் தலைமைகளின் உட்பூசல்களால் அவை மேலும் பிளவுபட்டுக் கொண்டு போகின்றன. சுதந்திரத்தின் ட்

தமிழர் புதிய ஜனநாயக கட்சி(TNDP)

(தமிழரின் ஏகோபித்த கட்சி)

இன்று தமிழரின் அரசியல் எதிர்காலம் மிக ஆபத்தான நிலையில் உள்ளதை உணர்கிறீர்களா? இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளில் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? இதில் நீங்கள் தனியாக இல்லை. மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இதே நிலையில் தான் உள்ளார்கள். இதில் இருந்து மீள்வதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களை இந்த கட்சியின் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கான கிராம கிளையின் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்ளுங்கள்.

 

தேர்தல் மாவட்டம் தமிழ் வாக்காளர் (ஏறத்தாழ) மத்திய பொதுக்குழு உறுப்பினர்கள்
யாழ்/கிளிநொச்சி 593,000 12
வன்னி 246,000 5
திருகோணமலை 102,000 2
மட்டக்களப்பு 326,000 7
அம்பாறை 97,000 2